பு.கஜிந்தன்
மே 1ம் திகதி அ ன்றையதினம் யாழ்ப்பாணம் – கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் வறுமை காரணமாக 1ம் திகதி அன்று காலை உணவு அருந்தாமல் வெளியே சென்றுள்ளார். பின்னர் மதியம் கோண்டாவில் வீதியால் பயணித்தவேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.