நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது.
தமிழ் நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இப்படத்தின் வெளியீட்டை டீஜே இசைக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டத்துடன், மேள தாளம் முழங்க விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.