இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களின் திரு காந்திஜியும் ஒருவர். சுழிபுரத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், கனடா நிவாரணம் அமைப்பின் நிறுவனர் செந்தில் குமரனின் வேண்டுகோளுக்கிணங்கி கொழும்பு லங்கா மருத்துவமனையில் இதுவரை 68 கடினமான இதய சத்திர சிகிச்சைகளுக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடாமல் அவற்றை நிறைவேற்றி பலரது உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். இலவசமாக இந்த அற்புமான வைத்தியப் பெருந்தகை தனது நேரத்தினையும் மாத்திரமல்லாது இவரது குழுவில் பணியாற்றும் 15 மருத்துவ நிபுணர்களின் நேரத்தினையும் இலவசமாக அர்ப்பணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே காணப்படும் படங்களில் கொழும்பில் உள்ள கனடாவின் தூதுவர் கௌரவ எரிக் அவர்கள் மேற்படி வைத்தியப் பெருந்தகை காந்திஜி அவர்களை கௌரவிப்பதையும் அருகில் கனடா நிவாரணம் அமைப்பின் நிறுவனர் செந்தில் குமரன் நிற்பதையும் காணலாம்.