நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முதல் நாள் வசூலாக திரைப்படம் உலகளவில் 46 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியுள்ளது. இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவுடன் அடுத்து ஒரு திரைப்படத்தை கண்டிப்பாக இயக்குவேன் என கூறியுள்ளார். தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரெட்ரோ திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது “படக்குழுவின் ஒட்டுமொத்தமான கடின உழைப்பு தெரிகிறது. சூர்யாவின் நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் அருமையாக இருந்தது. காட் ப்ளெஸ்” என கூறியுள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தற்பொழுது பறப்பது போன்ற உணர்வில் இருப்பதாகவும் ரொம்ப நன்றி தலைவா என பதிவிட்டுள்ளார்.
