வடகாடு சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
வடகாடு வன்முறை சம்பவம் தொடர்பான காவல்துறையின் அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது;
“புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு வன்முறை சம்பவம் தொடர்பான காவல்துறையின் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. தேரோட்டத்தின்போது ஆதிதிராவிடர்கள் தேரை தொட்டு வணங்குவது வழக்கத்தில் இருந்து வருகிறது. வழக்கம்போல் தேரை தொட்டு வணங்கிய பட்டியலினத்தவர்களை அவமதித்துள்ளனர். முழுமையாக விசாரணை நடத்தாமல் காவல்துறை ஒரு நிலைப்பாட்டை எடுப்பது நல்லதல்ல. வடகாட்டில் தாக்குதலுக்குட்பட்ட பட்டியலினத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முயற்சி நடக்கிறது. வடகாடு சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என தெரிவித்துள்ளார்.