நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளை குவித்தது. இந்த நிலையில், ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ காணொளியை வெளியிட்டு அறிவித்தனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்கிறார் மற்றும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் கேரளா பகுதியில் நடைப்பெற்றது. படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் மோகன்லாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. முதல் பாகத்தில் மேத்யூ என்ற கதாப்பாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
