முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார் . இந்த சநதிப்பு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நாட்டின் அரசியலமைப்பு, மதச் சார்பின்மையை காப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல ஆழமான கருத்துக்களை பிரகாஷ் ராஜ் பகிர்ந்து கொண்டார். அவருடைய திரையுலகப்பணி மட்டுமன்றி, சமூகப்பணியும் சிறக்கட்டும். உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
