உள்ளூராட்சி மன்ற தேர்தலானது யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
06.05.2025 அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பி. ப 12.30 மணி நிலவரப்படி 34.48℅ வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்களிப்பு மந்த கதியில் இடம்பெறுவதுடன் குறைந்தளவு வாக்காளர்களே வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது. இதனால் வாக்களிப்பு நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது.
பி.ப 3.00 மணிக்கு பின்னர் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.