பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அதிகாலை சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்கு பல தரப்பினரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு ஆதரவாக நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவத்தின் முகம். ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளார்.
