பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்தி உள்ள ஆபரேஷன் சிந்தூரை பலரும் பாராட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கம் நிறைவேறும் வரை சண்டை ஓயாது. பிரதமர் மோடியுடன் நாட்டு மக்கள் அனைவரும் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.
