பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது. இந்த நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. 90 நிமிடங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராணுவம் எடுத்த நடவடிக்கை தொடர்பக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ராஜ்நாத்சிங் ராணுவம் எடுத்த நடவடிக்கை எடுத்த குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக ராஜ்நாத்சிங் கூறினார். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
