அண்மையில் ஒன்றாரியோ மாகாணத்தின் Red Tape Reduction அமைச்சின்பாராளுமன்றச் செயலாளராக நியமனம் செய்யப்பெற்ற மாகாண அரசின் உறுப்பினர் லோகன் கணபதி அவர்களைப் பாராட்டிய முதல்வர் டக் போர்;ட் அவர்கள் லோகன் கணபதி அவர்களின் சேவை மனப்பான்மையையும் அவரது தொகுதி மக்களுக்கும் ஒன்றாரியோ வாழ் மக்களுக்கும் அரிய சேவையாற்றும் ஒரு மாகாண அரசின் உறுப்பினராக எமது அரசாங்கத்தில் பதவி வகிப்பை தான் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
அன்றை பதவியேற்பு வைபவத்தில் சமூகமளித்த மேற்படி Red Tape Reduction அமைச்சரான அன்றியா அவர்களுக்கும் லோகன் கணபதி அவர்கள் தனது நன்றியையும் தெரிவித்து அவரது அமைச்சிற்கு தன்னாலான பங்களிப்பையும் வழங்குவதாகத் தெரிவித்தார். இந்த அமைச்சின் அதிகாரங்களில் மிக முக்கியமானது ஒன்றாரியோ அரசின் கீழ் வரும் சகல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களில் ஏற்படும் நேரம் மற்றும் செலவுகள் தொடர்பான விரயங்களையும் தாமதங்களையும் தவிர்க்கும் வகையில் கண்காணிப்புக்களையும் பரிசோதனைகளையும் மேற்கொள்வது என எமது உதயன் பத்திரிகை ஆசிரிய பீடத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.