விரைந்தோடிய 57 ஆண்டுகள்
அன்னையாய் 02-03-1935
ஆதியாய் 21-03-1968
அமரத்துவமாது சத்தியசீலன் பரமேஸ்வரி
(ஐயனார் கோவிலடி சுருவில்)
விரைந்தோடிய 40 ஆண்டுகள்
அன்னையிடம் 25-12-1957
அநியாய அழிப்பில் 05-05-1985
மரர். சத்தியசீலன் சத்தியமூர்த்தி
(ஐயனார் கோவிலடி சுருவில்)
(கொழும்பு ஸ்ரீ திருப்பதிஞ்ஜன்சி)
திதி: சித்திராபருவம் -11-07-2025
கண்திறவாக் கன்றுகளை கைவிட்டு சென்ற பசுவைப்போல்
உங்கள் பிரிவு இருந்ததாக அப்போது பேசிக்கொண்டவர்கள்
பருவத்தில் எம்மை பிரிந்து சென்றாலும்
இன்றும் உங்கள் வாழ்வின் சிறப்புக்களை மனங்களில் காவிக் கொண்டு
ஐம்பத்து ஏழு ஆண்டுகள் நகர்த்தி போய்விட்டது.
அம்மா என்று கதறிய காலம் போய் இன்னும் பல துன்பம் அடையாமல்
காத்தருள வேண்டுமம்மா…..
அன்புச் சோதரா இன்பம், துன்பம் எது வந்தெதிர் கொண்டாலும்
வாழ்க்கையில் இரண்டும் ஒன்றென எதிர் கொண்டு
வாழ்ந்து காட்டி எங்கள் வாழ்விற்கு அடித்தளம் அமைத்து
சீரான வழி காட்டினாய் எப்படி மறப்போம் உன்னை
கொடியவர்களின் யாழ் கோட்டைக்கு முன்னால் பண்ணை வெளியைக் கடந்து
அன்னையின் நினைவு நாளில் சகோதர, சகோதரிகளுடன் உணவருந்த வந்த
உன்னை அந்த துப்பாக்கியால் கிழித்துப் போட்ட நாளை மறக்க முடியுமா!
துடித்தோம், அழுதோம், புரண்டோம். பாழாய்ப்போன துப்பாக்கி ஏந்திய
கொடியவர்களை நிந்திப்பதா இல்லை கடவுளை நோவதா
இப்போ நாம் அழுவதை நிறுத்திவிட்டோம்
புலம்புவதை நிறுத்திவிட்டோம் ஆனாலும் நினைப்பதை மட்டும் நிறுத்த முடியவில்லை…
எங்கள் குடும்பத்தின் அன்புத் தெய்வங்களின் ஆதிமாக்கள் சாந்திபெற அன்பு பூ தூவி வணங்குகின்றோாம்.
உங்கள் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
உன் பிரிவால் துயரறும் சகோதரிகள், மைத்துன, மைத்துனிகள், மக்கள்,
ருமக்கள், உறவினர், நணீபர்கள்.