கடந்த மே 2ம் திகதி கனடா ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள நகர சபையின் சபா மண்டபத்தில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘அனைத்துலக ஊடகச் சுதந்திர தின விழாவில் கனடாவில் ஊடகத்துறையிலும் சமூகப் பணியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் எழுவருக்கு விருதுகள் வழங்கப்பெற்றன.
அவர்களில் கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களான Dr. Mohammad Tajdolati – The Hon. Joe Volpe- Aris Babikian MPP (தற்போதைய ஒன்றாரி யோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்)ஆகிய மூவரும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுகளை கழகத்தின் தலைவர் அவர்கள் வழங்கினார்கள். இங்கே காணப்படும் படங்களில் கழகத்தின் சிரேஸ்ட உப-தலைவர் ஆர். என்.லோகேந்திரலிங்கம் மற்றும் தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இவர்களில் Hon. Joe Volpe அவர்கள் கனடா மத்திய அரசின் முன்னாள் குடிவரவு மற்றும் பிராஜாவுரிமைகள் அமைச்சராக பணியாற்றியவர் என்பதும் தற்பொழுது ஒரு இத்தாலிய மொழிப் பத்திரிகையை நடத்திவருகின்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Seven individuals were honored for their life long struggles at the International Press Freedom day Celebration, hosted by National Ethnic Press & Media Council of Canada
The ‘National Ethnic Press & Media Council of Canada hosted a special celebration for the Freedom of the press on Friday, May the 2nd, 2025, at the Toronto City Hall, Members Lounge, 3rd floor.
The following 7 recipients were presented with plaques, for the services they had rendered. in the field of Journalism and Community Service.
Dr. Mohammad Tajdolati
The Hon. Joe Volpe
Aris Babikian MPP
Habeeb Alli
Hoang Thanh Tam Tran
Jeremy Grimaldi
Paul Nguyen