பாகிஸ்தானின் மிகப்பெரிய துறைமுகமான கராச்சி துறைமுகத்தை இலக்காக கொண்டு இந்திய கடற்படை ஏவுகணைகள் வீசி தாக்கியது. 1971-ம் ஆண்டுக்கு பிறகு கராச்சி நகரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக இந்திய ராணுவத்தின் விமானப்படை மற்றும் தரைப்படை ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், நள்ளிரவில் கடற்படை மூலம் தாக்குதல் வேட்டையில் இறங்கியது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, ராவல்பிண்டி, குவெட்டா. லாகூர் உள்ளிட்ட 9 நகரங்களில் இந்திய ராணுவத்தின் முப்படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
