கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர், புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன. சிஸ்டைன் ஆலயத்தில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் கூடு தங்களுக்குள் ஒருவரை அடுத்த போப் ஆண்டவராக தேர்வு செய்துள்ளனர். அதன்படி, அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் புதிய போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 69 வயதான ராபர்ட் புதிய போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் போப் 14ம் லியோ என்ற பெயருடன் தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். புதிய போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14ம் லியோவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
