இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டி உள்ளது.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இருநாடுகளும் மாறிமாறி எல்லைப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால், தற்போது இரண்டு நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் போர் பதற்றம் காரணமாக டில்லியில் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது .60 உள்நாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. டில்லியில் இருந்து புறப்படும் 30 விமானங்கள் டில்லிக்கு வரும் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளில் பாதிப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.