பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் எல்லை மாநிலங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த மூன்று தினங்களாக எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் நீடித்து வருகிறது. இதற்கு தக்க பதிலடி தாக்குதலை இந்திய ராணுவமும் கொடுத்து வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். இந்த தாக்குதலில் மராட்டிய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் சச்சின் வனான்ஜி என்ற ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளார்.
