போர் நிறுத்தம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு புத்திசாலித்தனமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த போர்பதற்றம் முடிவுக்கு வந்ததுள்ளது. எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர்மேகம் சூழந்தது. நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவிய பகிஸ்தான், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனால், எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். நேற்று 4-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தாக்குதலை நடத்தியது. இந்தியாவும் தக்க பதிலடியை மூர்க்கமாக கொடுத்தது. இதில் பாகிஸ்தானில் உள்ள ரபிகுய், முரிட் சக்லலா, ராம்கியார் கான், சுக்குர், சுனியன் உள்பட 8 ராணுவ நிலைகளை இந்திய ராணுவம் தாக்கியது. இதில் பாகிஸ்தான் நிலைகுலைந்தது என்றே கூறலாம். இதனால் பாகிஸ்தான் பணிந்தது. எனவே மோதல் ஒருபக்கம் நடந்து வந்த நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். இதையடுத்து இருநாட்டு முக்கிய அதிகாரிகளும் தொலைபேசியில் தொடர்ந்து பேசினர். பின்னர் சிறித்து நேரத்தில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னரும் பாகிஸ்தான் எல்லையில் சில மணி நேரம் அடாவடி செயலில் ஈடுபட்டது. இந்தியா இதனை தக்க பதிலடியுடன் முறியடித்தது. இரவுக்கு பிறகு பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன். இதனால், தற்போது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறுகையில், உயிரிழப்புகள் மேலும் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான மற்றும் அறிவார்ந்த நடவடிக்கை” என்று பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.