தி.மு.க. என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;- “கூட்டணி என்று வந்துவிட்டால் தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள். தேர்தல் என்பது தி.மு.க.விற்கு எதிரான ஜனநாயக போர். தி.மு.க. என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும். அதற்கு எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்திருக்கின்றன. கூட்டணியை பலப்படுத்தும் விதமாக, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் எங்களுடன் வருவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.” இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.