(ஓய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோத்தர்- வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை )
பதுளையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி, மற்றும் வவுனியா ஓயார் சின்னக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமணி சிவராமன் அவர்கள் கடந்த 13-05-2025 செவ்வாய்க்கிழமையன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்..
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி (முன்னாள் பதுளை ஒளியாமண்டி தோட்ட எழுதுவினைஞர்)-செல்லம்மா தம்பதியின் கனிஷ்ட புதல்வரும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (முன்னாள் இலங்கை புகையிரத் திணைக்களம்)- சிவக்கொழுந்து தம்பதியின் அன்பு மருமகனும்
செந்தில்மணி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்.
செந்தூரன் (வவுனியா- N. வைத்திலிங்கம் கொம்பனி), லாவண்யா, கோபிராம்(வவுனியா மாவட்டச் செயலக உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தந்தையும், அசோதரன், திலக்சா (லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.
காலஞ்சென்ற மகேந்திரன் (முன்னாள் அரச பெருந்தோட்ட தலைமை எழுதுவினைஞர்-இரத்தினபுரி), மகாலட்சுமி(முன்னாள் ஆசிரியை), தேவதாஸ் (பேர்லின்-ஜேர்மனி), ஆர். என். லோகேந்திரலிங்கம் (கனடா உதயன் பத்திரிகை நிறுவனர்), ஆகியோரின் பாசமிகு சகோதரரும் காலஞ்சென்றவர்களான இலட்சுமணசாமி(முன்னாள் ஆசிரியர்), தங்கமலர்(பாப்பா),சாவித்திரி (முன்னாள் ஆசிரியை-ஜேர்மனி). பத்மலோசனி(பாப்பா-கனடா), காலஞ்சென்ற சந்தானலட்சுமி (கனடா), ஜெகதாம்பிகை (மலேசியா) ஆகியோரின் மைத்துனரும் செல்வன் கிருத்திக் அவர்களின் ஆசைப் பேரனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-05-2025 அன்று வியாழக்கிழமை முற்பகல் தொடக்கம் வவுனியா ஓயார் சின்னக்குளத்திலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பின்னர் தகனக்கிரியைகள் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :-
அசோதரன் (மருமகன்) 0742693804
செந்தூரன் (மகன்) 0776114257
கோபிராம் (மகன்) 0776983460
வதிவிட விலாசம்:- 12/01, 2ம் ஒழுங்கை,
ஓயார் சின்னக்குளம் – வவுனியா