நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் சல்மான் கானின் “சிக்கந்தர்” படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, மஞ்சு விஷ்ணுவின் “கண்ணப்பா” படத்தில் பார்வதி தேவியாக நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ராமாயணத்தில் யாஷின் மனைவி மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு வந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். மேலும் யாஷ் ராவணனாக நடிக்கிறார். “ராமாயணம்” மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ஒரு மெகா படமாகும். இது ஐந்து மொழிகளில் 2 பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கும், 2-ம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகிறது.
