விஜய் சேதுபதியின் 50 – வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரீ வெளியீடு ஈவண்ட் நடைப்பெற்றது. அதில் விஜய் சேதுபதி பேசியதாவது ” எனக்கு இயக்குநர் ஆறுமுககுமாரை நடுவுல் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு முன்பாகவே தெரியும். ஒரு ஆடிஷனின் போது என்னை நல்லா நடிப்பான் என நம்பிக்கை வைத்து பரிந்துரை செய்தது ஆறு தான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல இவன் நல்லா நடிப்பான்னு சொன்னது ஆறு தான். அது காலத்துக்கும் அந்த நன்றி சொல்லிகிறேன். ஒரு இருள்-ல விளக்கு ஏத்தி வச்சது ஆறு தான். பழச எப்போது நினைவு வச்சுகிறது என்ன உயிரோடவும் ஈரத்துடன் வச்சுக்க உதவுது” என மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.