திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே செயல்படுத்த தொடங்கிவிட்டன. சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 8 ஆவது பொறுப்பாளராக தற்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்படுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.