மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் ஸ்ரீநாத் பாஸி. இவர் நடிப்பில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். தற்பொழுது ஸ்ரீநாத் அடுத்ததாக ஆசாதி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் .இப்படத்தை ஜோ ஜார்ஜ் இயக்கியுள்ளார். படத்தில் வாணி விஷ்வநாத், ரவீனா ரவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை ஃபைசல் ராஜா தயாரித்துள்ளார். திரைப்படம் ஜெயிலில் இருக்கும் தன் மனைவியை காப்பாற்ற போராடும் கணவனின் கதையாக உருவாகியுள்ளது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் வெளியாக இருக்கிறது. முன்னோட்டத்தை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது.
