பு.கஜிந்தன்
தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த விழிப்புணர்வு இன்று வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொழில் முயற்சியாளருக்கான நிதி சார்ந்த மற்றும் வங்கிக்கடன் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது
இந் நிகழ்வானது கைத்தொழில் அமைச்சின் NEDA அனுசரணையுடன் இன்று காலை 10:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் அரச, தனியார் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் பங்கு பற்றியதுடன் தொழில் முயற்சியாளருக்காக தமது வங்கிகளில் எவ்வாறான வங்கி கடன் மற்றும் நிதி சார்ந்த உதவிகள் செய்யப்படுகிறது என தெளிவூட்டப்பட்டது.
மேலும் வடமராட்சி கிழக்கில் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், தாம் சந்திக்கும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது