நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதியில் நடைப்பெற்று வருகிறது. படத்தில் தற்பொழுது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளனர். படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார். படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் நன்றாக சென்றுக் கொண்டு இருக்கிறது. ஜெயிலர் 2 படப்பிடிப்பு எப்போழுது முடியும் என தெரியாது ஆனால் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும். என கூறினார்.
