பிரான்ஸ் நாட்டில் 78-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் படையெடுத்து சென்று வருகின்றனர். வருடாவருடம் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரத்யேக உடையைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கான அழகு உடையுடன் நடை போட்டார். வெள்ளை நிற பனாரஸ் புடவையில் சிறப்பு வேலைப்பாடுகளுடன் உருவான அந்தப் புடவை அனைவரையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
