உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 186வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 266 டிரோன்கள், 45 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
