விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான பூஜை விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சுரேஷ் இயக்கவுள்ளார். இவர் வெற்றி மாறனின் துணை இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கதையை டாணாக்காரன் இயக்குனர் தமிழ் எழுதியுள்ளார் . இப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையாக இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் விக்ரம் பிரபு காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வரும் வாரங்களில் தொடங்க இருக்கிறது. படத்தின் இசையை ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொளண்டார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
