தமிழ் மக்களின் நெருங்கிய நண்பி பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் ஒட்டாவாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் Scarborough Centre — Don Valley East, தொகுதியின் உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் ஒரு அலுவலராக இணைந்த சமூக அக்கறையுடன் செயற்பாட்டும். பல்லினங்கள் சார்ந்த நண்பர்களோடும் அமைப்புக்களோடும் இணைந்து செயற்பட்டு அரசியலில் உயர்ந்தவரும் தமிழ் மக்களின் நெருங்கிய நண்பியுமான பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்கள் ஒட்டாவா மாநகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் கடந்த 21ம் திகதி புதன்கிழமையன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அந்த நாளில் ரொறன்ரோ நகரிலிருந்து புறப்பட்ட பஸ் ஒன்றில் தனது ஆதரவாளர்களோடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடும் பயணித்து ஒட்டாவாவை அடைந்து அங்கு இடம்பெற்ற அரச வைபவம் ஒன்றில் அன்னார் Scarborough Centre—Don Valley East, தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அங்கு எடுக்கப்பெற்ற படங்கள் இங்கு காணப்படுகின்றன.
-படங்களும் செய்தியும்: சத்தியன்