அமெரிக்காவின் மினியாபோலிஸ்–செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது, இதனைக்கண்ட பயணிகள் சத்தம் போட்டு அலறினர். இதனையடுத்து ஒரு பயணி அதைப் பிடிக்க முயற்சித்தார். இந்த தருணத்தை பயணி ஒருவர் காணொளியில் படம் பிடித்தார். அந்தப் பறவை கேபினுக்குள் படபடவென பறக்கும்போது, ஒரு பயணி ஜாக்கெட்டைப் பயன்படுத்தி அதைத் தடுத்து நிறுத்துவதை இந்தக் காட்சிகள் காட்டுகின்றன. விமானத்திற்குள் நுழைந்த ஒரு புறாவை ஏற்கனவே விமானத்திலிருந்து அகற்றினர். இருப்பினும், விமானம் ஓடுபாதையை நோக்கி நகர்ந்தபோது, இரண்டாவது புறா தோன்றியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் விமானம் புறப்படுவதில் 56 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.