தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 46-வது படத்தில் நடிக்க உள்ளார். இதனை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 46’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக மமிதா பைஜு நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த மாதம் 19-ந் தேதி சூர்யா 46 படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இதானல் சூர்யா 46 படக்குழுவினர் பழனி முருகன் கோவில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
