அறிமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளர். இதில் கதாநாயகியாக ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் நடிகை சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின. திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக ‘லவ் மேரேஜ்’ உருவாகியுள்ளது. ‘லவ் மேரேஜ்’ படம் வருகிற 27ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ‘லவ் மேரேஜ்’ படத்தின் ‘எடுடா பாட்டலே’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் இயக்குனர் மிஷ்கின் பாடியுள்ளார்.
