பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிறிமோகன் கஜேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார். இவர் கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மனைவியின் தந்தையின் வீட்டுக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு 23ம் திகதி காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
























