பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் நகரின் மேயராகக் கடமையாற்றி தற்போதும் கவுன்சிலராக தொடர்ந்தும் பணியர்றறும் வைத்தீஸ்வரன் தயாளன் கனடா உதயன் ஆசிரிய பீடத்திடம் தெரிவிப்பு
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

“ஐந்து இலட்சத்திற்கும்அதிகமாக கனடிய தேசத்தில் புகழோடும் பெருமையோடும் வாழும் தமிழ்க் கனடியர்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற முதலாமவர் என்ற புகழுக்குரிய மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி என்னும் அரசியல் தலைவரைச் சந்திக்கக் கிட்;டிய வாய்ப்பு மிகவும் பெருமதியானது . கனடாவாழ் தமிழ் மக்கள் மாத்திரமல்ல ஏனைய சமூகத்தவர்களும் நன்கு நேசிக்கும் அரசியல் தலைவரான அவர்களைச் சந்தித்த அனுபவம் மறக்க முடியாதது”
.இவ்வாறு, பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் நகரின் மேயராகக் கடமையாற்றி தற்போதும் கவுன்சிலராக தொடர்ந்தும் பணியாற்றுபவரும் மற்றும் இலத்திரனியல் பொறியியலாளர் அத்தடன் அங்கு சிறந்த அரசியல் செயற்பாட்டாளராகவும் விளங்கும் வைத்தீஸ்வரன் தயாளன் என்னும் மக்கள் சேவையாளர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திடம் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். நேற்று புதன்கிழமை 25ம் திகதி பிற்பகல் மார்க்கம் நகரில் உள்ள மார்க்கம்-தோர்னிஹில் தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் அலுவலகத்தில் அவரை சந்தித்த பின்னர் உதயன் ஆசிரிய பீடத்தின் உறுப்பினர்களோடு உரையாடிய போது தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி பழைய மாணவரான வைத்தீஸ்வரன் தயாளன் 1970ம் ஆண்டளவில் இங்கிலாந்துக்குச் சென்று அங்கு இலத்திரனியல் மற்றும் கொம்பியூட்டர் துறையில் பட்டங்களைப் பெற்று பல பதவிகளைப் வகித்த பின்னர் பணியிலிருந்து ஓய்வு எடுத்ததன்ல்வர் பின்னர் பொதுப் பணிகளிலும் தமிழ் மொழி சார்ந்த கற்பித்தல் பணியிலும் அரசியல் செயற்பாடுகளிலும் பங்கெடுத்து முழு நேர மக்கள் பணியாளராக விளங்குகின்றார்.

அன்னாரை தனது அலுவலகத்தில் சந்தித்த மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் தயாளன் அவர்களோடு நீண்ட நேரம் உரையாடிய பின்னர் அவரை கௌரவிக்கும் முகமான மாகாண அரசாங்கத்தின் சார்பிலும் மாகாண முதல்வரின் சார்பிலும் பாராட்டுப் பத்திரம் ஒன்றை தயாளன் அவர்களுக்கு வழங்கினார்.
இருவரும் உரையாடிய சுமார் ஒரு மணிநேரத்தில் பரஸ்பரம் இங்கிலாந்து- கனடிய தமிழ் மக்கள் தொடர்பாகவும் அவர்களது வாழ்வியல் மேம்பாடு தொடர்பாகவும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்
























