அவுஸ்திரேலியா மெல்பேர்னில் அண்மையில் ,இனிமையான இசைப்பொழுதொன்றில் இசைப்பிரியர்கள் லயித்திருந்தனர். அவுஸ்திரேலியா விக்டோரியா மெலபர்ன் வர்ஷா இசைக்கல்லூரியின் கர்நாடக இசைக்குறுங்கச்சேரி அண்மையில் மெல்பேர்ன் நகரில் நிகழ்ந்தது.
மெல்பர்ன் வர்ஷா இசைக்கல்லூரியின் மாணவனான நிஷித் ராஜன்பாபுவின் கர்நாடக இசை குறுங்கச்சேரி ஒரு மாலைப்பொழுதை ரம்மியமாக்கி இருந்தது. விக்டோரியா சான்ட்லெர் சமூக நிலைய மணட்பத்தில் இந்த இசைக்குறுங்கச்சேரி இடம்பெற்றது.
தனது நான்காவது வயதில் இருந்து பத்து வருடங்களாக கர்நாடக சங்கீதம் பயின்று வரும் இளம் பாடகர் நிஷித் ராஜன்பாபு பல மேடைகளில் பாடியிருக்கிறார். பல இசைப்போட்டிகளிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடி வெற்றியும் பாராட்டுதல்களையும் வெகுவாகப்பெற்றுள்ளார். இளம் கர்நாடக இசைக்கலைஞன் நிஷித், இலங்கையைச்சேர்ந்த ஆனந்தசிவம் ராஜன்பாபு அலங்ருதா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.
நிஷித் ராஜன்பாபு பாடுவதையும் சதீபன் இளங்குமரன் மிருதங்கம் வாசிப்பதையும் நர்த்தனா கனகசபை வயலின் இசைப்பதையும் அனிருத் சிவராமகிருஸ்ணமூர்த்தி கடம் வாசிப்பதையும் ஹரினி சுரேஸ்காந் தம்புரா மீடடு;வதையும் வர்ஷா இசைக்கல்லூரியின் ஆசிரியை துஷாந்தி லக்ஸ்மன் இளம் கர்நாடக ,சைப் பாட்டுக்கான விருது வழங்குவதையும் காணலாம்.
செல்வி வரநதி ராமராகவன், நிக்ஷிந்த் ராஜன்பாபு, சற்சனன் வியாசன் ஆகியோர் இணைந்து வரவேற்புரை நிகழ்த்துகின்றனர்.
பிரபல ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சத்தியா நிரஞ்சன் இந்த கர்நாடக இசைக் குறுங்கச்சேரி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
ஷஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக மெல்பர்ன் வர்ஷா இசைக்கல்லூரி அரங்N; கற்றம் என்றில்லாது குறுங்கச்சேரியாக நடத்துவது மிகவும் முன்னோடியான நிகழ்வு. எமது இசைப்பாரம்பரியத்தை அவுஸ்திரேலியா மண்ணில் வர்ஷா இசைக்கல்லூரி வளர்த்து வருகின்றது. நிஷித் என்ற இளம் பாடகன் எதிர்காலத்தில் வெகுவாகப் பிரகாசிப்பாரென்று வாழ்த்துகின்றேன் என்று தொகுப்பாளர் சத்தியா நிரஞ்சன் சுட்டிக்காட்டியுள்ளமை இசை உலகுக்கு சமர்ப்பணம்.
இக்குறுங்கச்சேரியில் ;நிஷித் வியத்தகுமுறையில் ;கர்நாடக் சஙகீதத்தை வெளிப்படுத்திப் பார்வையாளர்களை தமது பாடல்களால் பரவசப்படுத்தினார். இளம்பாடகர் நிஷித்தின் பெற்றோர் இலங்கை வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
























