தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.
J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகிய வீராங்கனைகளே இடம்பெற்றுள்ளனர். இப்போட்டி பங்களாதேஸில் ஜூலை 11 தொடக்கம் 21 வரை நடைபெறவுள்ளது. இவ்வீராங்கனைகளை வாழ்த்திப் பாராட்டுவதோடு, இவ்வீராங்கனைகளை தேசிய அணியில் இடம்பிடிக்கும் வகையில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய பாடசாலைப் பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமார் அவர்களையும் மகாஜனாக் கல்லூரி பெற்றோர்-ஆசிரியர் மற்றும் மாணவச் சமூகங்கள் பாராட்டியுள்ளன.
























