பு.கஜிந்தன்
வரலாற்று சாதனை படைத்துள்ளது உடுத்துறை மகாவித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியப் பெருந்ததைகள்மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
யாழ். வடமராட்சி கிழக்கு தேசிய பாடசாலையான உடுத்துறை மாகா வித்தியாலயம் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகளின் அடிப்படையில் வரலாறு சாதனை படைத்துள்ளது. குறித்த கல்லூரியில் கல்வி கற்கும் நான்கு மாணவர்கள் 9Aசித்திகளை பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
செல்விகள் Y.ரம்சிகா, s.கவிநிலா, u.கவியரசி மற்றும் செல்வன் T.குபேசன் ஆகிய நான்கு மாணவர்களே 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை v.இசைவானி மற்றும் A.சங்கவி ஆகியோர் மாணவர்கள் 8ஏ சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
























