ஆடிப் பிறப்பு அருமைத் திருநாள்
பாடி ஆடியே பரவசம் கொண்டோம்
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடித்தோம்
தேடிக் கொழுக்கட்டை திகட்டத் தின்றோம்
நவாலி ஊரின் நல்ல கவிஞன்
நவின்றார் நமக்கொரு நல்ல கவியை
சோம சுந்தரச் சோதி நாயகன்
தாமம் போன்றொரு தங்கத் தாத்தா
அறிந்தவன் அறிவான் அரியலூர் பனாட்டை
உறிஞ்சியே உணர்வான் ஊதுபாற் கூழை
அந்நாள் நினைத்தால் அடிவயி றேங்குது
சொந்த நாடுபோய்ச் சுவைத்துக் குடிக்கவே!
நாடு விட்டு நாடு வந்தோம்
வீடுவாங்கி விலாசமாய் வாழ்ந்து காட்டுறோம்;
நாகரீகம் நாங்கள் நன்றே கற்றோம்
வேகமாய் விட்டோம் விசேட நாட்களை
வேலை தொடங்க வேகமாய் ஓடுறீர்
காலை மாலை கடும்பணி செய்கிறீர்
ஒருநாள் ஏனும் ஓய்ந்து
திருநாட் கூழைத் திகட்டக் குடிப்போமே! (தாமம்—-ஒளி)
ஆக்கம் …….
பாவலர் மார்க்கம் சந்திரன் வேலா
416 844 7453.
























