கனடா வாழ் தமிழ் மக்களை வேண்டிநிற்கின்றனர் ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்தின் நிதி சேகரிப்புக் குழுவினர்

கனேடியத் தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான தமிழ்ச் சமூக மையம் ஒன்றை கட்டி முடிக்கும் முயற்சி கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதை பலரும் அறிவார்கள்
ரொரன்ரோ நகர சபை இதற்கான நிலத்தை 311 Satines வீதியில் வழங்கியுள்ளது.
கனடாவின் மத்திய மற்றும் ஒன்றாரியோ மாகாண அரசுகள் 26.3 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
இந்த நிதி உதவியினை பயன்படுத்தி தமிழ்ச் சமூகமையத்தை கட்டி முடிப்பதற்கு தமிழ்ச் சமூகத்திடமிருந்து 15 மில்லியன் டொலர்களை திரட்ட வேண்டியது எமது முக்கிய பணியாக நாம் மேற்கொள்ள வேண்டும்
அத்துடன் இந்த கட்டுமானத்தை 2027ம் ஆண்டுக்குள் நிறைவு செய்வ வேண்டும் என்பதும் அவசியம்.
மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழும் இந்த நாட்டில் அனைவரும் பங்களித்தால் இந்த இலக்கை அடைய முடியும்.
இவ்வாறு ஸ்காபுறோ அமைய திட்டமிடப்பட்டுள்ள தமிழ்ச் சமூக மையத்தின் நிதி சேகரிப்புக் குழுவினர் கனடா வாழ் தமிழ் மக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
இந்த முக்கிய நிதி சேர்ப்புத் திட்டம் தொடர்பாக தொடர்ச்சியாக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பெற்று நடைபெற்று வருகின்றன. பல தமிழர் வைபவங்களில் ஸ்காபுறோ தமிழ்ச் சமூக மையத்தின் நிதிக்காக மக்கள் இயன்றளவு நிதியை பகிரங்கமாக வழங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி நிதி சேகரிப்புக் குழுவினர் கூட்டாக கடந்த பல மாதங்களாக இந்த வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்
“.இந்த அரிய சந்தர்ப்பத்தை எமது கனடிய தமிழ்ச் சமூகம் கைவிட்டு விட்டால் நாம் தலை குனிந்தவர்களாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும். தமிழ்ச் சமூகத்தை தலை நிமிர்ந்து நிற்கும் நிலைக்கு உயர்த்தக் கூடிய இந்த உயரிய திட்டத்தை நிறைவேற்ற தவறினால் நாம் எதிர்கால கனடிய தமிழ்ச் சந்ததிக்கு பாதகம் செய்து விட்டோம் என்ற குற்ற உணர்வு எம்மிடம் என்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கும். எனவே நாம் இன்றிலிருந்து ‘ ஸ்காபு றோ தமிழ்ச் சமூக மையம்’ கட்டியெழுப்பெற்று நிமிர்ந்து நிற்பதை உறுதி செய்யும் வகையில் அடுத்து வரும் இரண்டு மாதங்களில் இந்தப் பணிக்காக உழைப்போம் என்று உறுதி எடுப்போம்”
இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
10,000 டொலர்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் குடும்ப நன்கொடைத் திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். 2500 குடும்பங்கள் இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் இந்த இலக்கினை அடைய முடியும்.
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள் மிக மோசமான தாக்கத்தை அனைவருடைய வாழ்விலும் ஏற்படுத்தி வருவதால் இந்த இலக்கை அடைவதில் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது.
இதற்கு மாற்றீடாக 1000 டெலார் பெறுமதியான நன்கொடைக்கான கட்டுமானக் கல் கொள்வனவுத் திட்டம் ஒன்று தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாதாந்தம் 100 டொலர்கள் செலுத்தி இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.
25,000 பேர் இந்த கட்டுமானக் கற்களை கொள்வனவு செய்யவதன் மூலம் எமது பெருங் கனவினை நனவாக்கலாம்.
2500 பேரை அடையாளம் கண்டு அவர்களை இந்த திட்டத்தில் இணைப்பதற்கு பல நூற்றுக் கணக்கான சமூக பங்களார்களின் Community Builders இன் ஒத்துழைப்பு அவசியாமகின்றது.
எமக்கான ஒரு சமூக மையம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பேரார்வம் கொண்டவர்கள் இதில் இணைவதன் மூலம் இதனை சாத்தியமாக்க முடியும்.
உங்கள் குடும்பத்தில், நண்பர்கள் வட்டத்தில், பணியிடத்தில், நீங்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் உங்களுக்கு அறிமுகமானவர்களிடம் இந்த நன் கொடைக் கல் திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.
ஓவ்வொருவரும் தமக்கு நெருக்கமான 10 பேரை இந்த திட்டத்தில் இணைப்பதன் மூலம் இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை நாம் கட்டி முடிக்கலாம்.
இந்த சமூக மையமானது எமக்கானது எமது எதிர்காலம் இந்த மண்ணில் தமிழ் அடையாளத்தோடு வாழ்வதற்கு அவசியமானது.
எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்வதற்கும் அமது பெருமைகளை அவர்கள் தெரிந்து கொள்வதற்குமான வாய்ப்பினை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கது.
இந்த பதிவினை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்வதோடு இதற்கு தமது பங்களிப்பினை வழங்கக் கூடிய 10 பேரை உங்கள் பதிவில் குறிப்பிடுங்கள் (Tag) .
அதேபோன்று உங்களுக்கு நன்கு அறிமுகமான தமிழ் ஆர்வம் கொண்ட 10 பேருக்கு இதனை பகிர்ந்து கொள்ளுங்கள் (Share).
சிறு துளி பெரு வெள்ளம்
நாம் ஒன்றாய் சேர்ந்து கட்டி முடிப்போம்.
இந்த திட்டத்தில் நீங்கள் இணைவதற்கான இணைப்பு – > https://www.donatetcc.ca/
நன்றி
தமிழ்ச் சமூக மையம்

























