பத்திரிகையாளர் சந்திப்பிற்கான அழைப்பு..!
தலைப்பு:
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு – தகவல்கள் வெளியீடுமற்றும் நீதிகோரும் பொதுக்கூட்டம்.
மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களே,
கனடாவின் Ontario மாநிலத்தின் Toronto பகுதியில், “செம்மணி எழுச்சி – அணையா தீபம்” என்ற தலைப்பில் ஒரு மாபெரும் கண்டனப்போராட்டம் நடத்தப்பட
இருக்கின்றது. தமிழர் வரலாற்றில் நீங்காப்புள்ளியாகச் சொரூபம் பெற்ற அணையா தீபப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவும், அதன் ஒளியினை மேலும் பரப்பும்
நோக்கத்துடனும் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
இப்பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். இக்கூட்டத்தில் சுயாதீனமாக உறுதிசெய்யப்பட்ட தகவல்கள், நடந்துவரும் விசாரணைகள், நீதி மற்றும் பொறுப்புக்கூறலினை வலியுறுத்தும் பொதுக்கருத்துக்கள் பகிரப்படும்.
பத்திரிகையாளர் சந்திப்பு விவரங்கள்:
இடம்: Frontline Community Centre
3031 Markham Road, Unit #27, Scarborough, ON M1X 1L9
திகதி: திங்கட்கிழமை, ஜூலை 21, 2025
நேரம் : மாலை 6:00
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்: Behind Me Foundation / Behind Me International Media
செம்மணிக் கல்லறையில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் உலகறியப்படாத அநியாயங்களையும், தமிழினஅழிப்பினையும், அதன் ஆதாரங்களினையும் சர்வதேச சமூகத்திடற்கு கொண்டுசெல்லும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் நிகழ்வு உண்மை மற்றும் நீதிக்காக போராடுவபவர்களுக்கான அழைப்பாகவும் அமைகிறது. இந்தநிகழ்வில் உங்கள் பங்கேற்பும் ஊடகவியலாளர்களாக உங்கள்ஆதரவும் இந்த சோகம் நிரம்பிய உண்மையை வெளிக்கொணர உதவும்.
ஊடகங்களின் கவனத்திற்கு:
புகைப்படக்காரர்கள், வீடியோ பதிவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
நேரலை நேர்காணல்கள் மற்றும் நிகழ்வு தொடர்பான கருப்பொருளும் ஊடகங்களுடன் பகிரப்படும்.
தமிழ் சமூகத்துடன் ஒற்றுமையாக நின்று, இவ் நிகழ்வில் கலந்துகொள்ள அனைவரையும் ஊக்குவிக்கிறோம். இந்த முக்கியமான மற்றும் வரலாற்றுச்சிறப்புடைய நிகழ்வில், உங்கள் பயனுள்ள பங்கேற்பை எதிர்பார்க்கின்றோம்.
Warm regards,
Logan Logendralingam
Senior Board of Director- Behind Me Media Inc
contact@behindme.ca | +1-647-302-1189 / +1-416 732 1608

























