மாநிலங்களவை எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பதவியேற்றார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை கூடியது. மாநிலங்களவை கூடியது, எம்.பி.யாக கமல் தமிழில் பதவியேற்று கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதை தொடர்ந்து, திமுகவின் வில்சன், சிவலிங்கம், சல்மா மற்றும் அதிமுகவின் இன்பதுரை, தனபால் எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டனர்.
























