சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நெல்லையில் கவின் ஆணவ கொலை செய்யப்பட்டது குறித்து கூறியதாவது: 2024-ம் ஆண்டு சாதிக்கட்சிகளை இணைத்து பா.ஜ.க. கூட்டணி அமைத்தது. 2024-ல் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது பாட்டாளி மக்கள் கட்சி
எல்லா சாதிக்கட்சிகளையும் இணைத்து ஒரு மதகட்சி தலைமை வகித்தது. பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி என்பது தெரியும். சமபங்கு என்றால் மாளிகையில் இருப்பவர்களுக்கும், தாழ்தளத்தில் குடிசையில் இருக்கிறவங்களும் சம பங்கு என்று சொன்னால் ஏற்புடையதாக உள்ளதா? நாட்டில் அடிப்படையை தகர்த்து மறுகட்டடம் கட்டணும்னு. வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமூகத்தை தகர்த்து முற்றிலுமாக புதிய ஒரு சமூகம் படைப்பது தான் புரட்சி என்கிறார்கள். அதற்காகதான் நாங்கள் போராடுகிறோம். அதனால் தான் நாங்கள் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் என்கிறோம். இந்த அரசியலுக்குள், இந்த அமைப்புகள் ஒன்னும் செய்யமுடியாது. இந்த உலகத்தில் எப்படி கூட்டி கழித்தாலும் மீதம் உள்ளது அன்புதான் என்றார்.
























