(மன்னார் நிருபர்)
(07-08-2025)
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் 7ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் இடம் பெற்றது.
-மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பிரேம் குமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த வேலைத்திட்டத்தின் போது மாந்தை மேற்கில் உள்ள பிரதான வீதிகளில் குறித்த வேளைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ,பணியாளர்கள்,பிரதேச சபை பணியாளர்கள்,வைத்தியசாலை பணியாளர்கள், இராணுவத்தினர் என பலர் கலந்து கொண்டு சிரமதான பணி யை முன்னெடுத்தனர்.
இதன் போது மாந்தை சந்தியில் இருந்து வட்டக்கண்டல் வரையிலான பிரதான வீதியில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
























