நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை காவல்துறை மரியாதையை ஏற்றார். இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உண்மையான கூட்டாட்சியாகத் திகழும் இந்தியாதான், வலிமை பெற்ற வளர்ந்த இந்தியாவாகத் திகழ முடியும். மாநில உரிமைகளை மீட்டெடுக்கத் தேவையான அரசியல்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு என்ற உறுதியுடன் – முத்தமிழறிஞர் கலைஞர் பெற்று தந்த உரிமையுடன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணங்கினேன்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
























