முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார்.
தமிழகத்திற்கு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ந்தேதி ஜெர்மனி செல்கிறார். அவரது பயண விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி 30-ந் தேதி காலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார். 31-ந் தேதி அங்கு ஜெர்மனி அயலக அணி நிர்வாகிகளை சந்திக்கிறார். செப்டம்பர் 1-ந் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். 2 அல்லது 3-ந் தேதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தொழில் முனைவோரை சந்தித்து உரையாடுகிறார். 4-ந் தேதியன்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நல வாரியத்துடனான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
























