சமீபத்தில் ரவி மோகன் அவரது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில் ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார். மேலும் அடுத்ததாக ரவி மோகன் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு ஆர்டனரி மேன் என்ற தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோ காணொளியை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட உள்ளது. இது தொடர்பான பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது.
























