சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைவில் தனது தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளேன். அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியதே பா.ஜ.க. தான் என்று இ.பி.எஸ். கூறியிருப்பதற்கு நல்ல ஒரு விளக்கத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
























