அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றயைதினம் மனைப் பொருளில் கண்காட்சி சிறப்பாக இடம் பெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மாணவர்களின் கற்பனைத்திறன் கொண்ட ஆக்கங்கள் பலவும் காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.
இவ்விழாவில் மாணவரின் பாரம்பரிய உணவுத் தயாரிப்புக்கள் பலரையும் கவர்ந்தன.
இங்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழகத்தின் மனைப் பொருளியல் அலகின் தலைவர் திருமதி மேனகா சிவகரனும், சிறப்பு விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய தொழில்நுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் அருந்தவம் மற்றும் மனைப்பொருளியல் அலகின் விரிவுரையாளர்களான முகம்மது சாரிப், டிலக்ஷிகா ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
























